Enable Javscript for better performance
நிலத்தகராறு: மத்திய ரிசர்வ்  போலீஸார் தலைமறைவு- Dinamani

சுடச்சுட

    

    நிலத்தகராறு: மத்திய ரிசர்வ்  போலீஸார் தலைமறைவு

    By  உளுந்தூர்பேட்டை,  |   Published on : 27th March 2014 08:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நிலத்தகராறில் சகோதரனையும் அவரது மனைவியையும் தாக்கியதாக மத்திய ரிசர்வ் படை போலீஸார் 2 பேரை திருநாவலூர் போலீஸார் செவ்வாய்க்கிழமை தேடி வருகின்றனர்.
     உளுந்தூர்பேட்டை வட்டம் பெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர படையாட்சி. இவருடைய மகன்கள் விநாயகம், பழனிவேல், அய்யப்பன். இதில் பழனிவேல் மற்றும் அய்யப்பன் ஆகிய இருவரும் மத்திய ரிசர்வு படை போலீஸில் பணிபுரிந்து வருகின்றனர்.
     இவர்கள் மூவருக்குமிடையே ஏற்பட்ட நிலத்தகராறில் பழனிவேல், அய்யப்பன் ஆகிய இருவரும் சேர்ந்து விநாயகம் மற்றும் அவரது மனைவியை தாக்கினராம்.
     இதுகுறித்து விநாயகம் மனைவி கொடுத்த புகாரின்பேரில் திருநாவலூர் சப்-இன்ஸ்பெக்டர் சிவசண்முகம் வழக்குப் பதிந்து இருவரையும் தேடி வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai