Enable Javscript for better performance
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: ஆட்சியர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: ஆட்சியர் ஆய்வு

    By  விழுப்புரம்,  |   Published on : 27th March 2014 08:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விழுப்புரம் தூய இருதய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும் தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
     அவர் கூறியது: விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் 7009 மாணவர்கள், 6712 மாணவிகள், திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் 9444 மாணவர்கள், 9257 மாணவிகள், கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டத்தில் 7320 மாணவர்கள், 6540 மாணவிகள் என 23773 மாணவர்களும், 22509 மாணவிகளும் மொத்தம் 46282 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் 44 தேர்வு மையங்களும், திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் 66 தேர்வு மையங்களும், கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டத்தில் 40 தேர்வு மையங்களும் என 150 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
     இத் தேர்வு பணியில் மொத்த வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் 14 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் தேர்வு பணியில் அறை கண்காணிப்பாளர்கள் 2564 நபர்களும், விடைத்தாள் கட்டுக்காப்பாளர்கள் 28 நபர்களும், தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்கள் 152 நபர்களும், துறை அலுவலர்கள் 152 நபர்களும், வினாத்தாள் வழித்தட அலுவலர்கள் 32 நபர்கள், 249 உறுப்பினர்களைக் கொண்ட 96 பறக்கும்படை என மொத்தம் 3177 அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்வில் மாணவர்கள் எந்தவித முறைகேடுகளிலும் ஈடுபடா வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
     மாவட்டக் கல்வி அலுவலர் எஸ்.மாதவன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சண்முகம், மாவட்ட கல்வி அலுவலக கண்காணிப்பாளர் ரமேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai