Enable Javscript for better performance
மார்க்சிஸ்ட் வேட்பாளர் வாக்கு சேகரிப்பு- Dinamani

சுடச்சுட

    

    மார்க்சிஸ்ட் வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

    By  உளுந்தூர்பேட்டை,  |   Published on : 27th March 2014 08:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விழுப்புரம் (தனி) நாடாளுமன்றத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஜி.ஆனந்தன் உளுந்தூர்பேட்டை ஒன்றியத்துக்கு உள்பட்ட கிராமங்களில் புதன்கிழமை வாக்கு சேகரித்தார்.
     இப்பிரசாரத்தை விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ ஆர்.ராமமூர்த்தி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை, ஒன்றியச் செயலாளர்கள் உளுந்தூர்பேட்டை எம்.ஆறுமுகம், திருநாவலூர் டி.எம்.ஜெயசங்கர், மாவட்ட செயற்குழு எம்.கே.பூவராகவன், வி.இராதாகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் வட்டாரச் செயலாளர் ஆறுமுகம், வாலிபர் சங்க மாநில துணைச் செயலாளர் எம்.செந்தில், மாவட்டச் செயலாளர் ஜெ.ஜெயக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
     இம்பிரசாரம் உளுந்தூர்பேட்டையில் தொடங்கி, கட்டுநெமிலி, குறும்பூர், நாச்சியார்பேட்டை, பா.கிள்ளனூர், மேப்புலியூர் வழியாக சென்று கருவேப்பிலைப்பாளையம், காந்தலவாடி, அரசூர் உள்ளிட்ட 37 கிராமங்களில் நடைபெற்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai