Enable Javscript for better performance
விழுப்புரம்-புதுச்சேரி சாலையில்  போலீஸார் கெடுபிடி - Dinamani

சுடச்சுட

    

    விழுப்புரம்-புதுச்சேரி சாலையில்  போலீஸார் கெடுபிடி

    By  விழுப்புரம்,  |   Published on : 27th March 2014 08:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, விழுப்புரம்-புதுச்சேரி சாலையில் காவல் துறையினரின் கெடுபிடி அதிகரித்துள்ளது.
     விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 24-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து முக்கிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரம் செய்து வருகின்றன. இந்நிலையில் புதுச்சேரி பகுதியில் இருந்து மதுபாட்டிகள் கடத்தப்படுவதை தடுக்க இடைப்பட்ட பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் தீவிரமாக வாகனங்களை சோதனையிட்டு வருகின்றனர்.
     காவல் துறையினர் பலர் சோதனைச் சாவடி மட்டுமின்றி பல்வேறு இடங்களிலும் நின்று சோதனை நடத்தி வருகின்றனர். இச் சோதனையில் சிக்கும் மதுபாட்டில்கள் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, முறையாக உரிய அலுவலர்களிடம் ஒப்படைக்கப்படுகிறதா என்பது குறித்து அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai