Enable Javscript for better performance
வேட்பாளர்கள் சொல்கிறார்கள்...- Dinamani

சுடச்சுட

    

    எஸ்.ராஜேந்திரன் (அதிமுக): திருக்கோவிலூர் நகரம் வேகமாக வளர்ந்து வருகிறது. பெருகி வரும் மக்கள் தொகை, பயணிகள் வருகைக்கேற்ப புதிய பேருந்து நிலையம் அவசியம். நான் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால், திருக்கோவிலூரில் விரிவுப்படுத்தப்பட்ட நிலையில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு முழுமையாக பாடுபடுவேன்.
     
     கோ.முத்தையன் (திமுக): குறுகிய பரப்பில் அமைந்துள்ள திருக்கோவிலூர் பேருந்து நிலையம் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. பேருந்துகள் நகர முடியாத அளவுக்கு நெரிசல் நிலவுவதால் விபத்து அபாயமும் உள்ளது. நான் தேர்தலில் வெற்றிபெற்றால், திருக்கோவிலூரில் விரிவுப்படுத்தப்பட்ட புதிய பேருந்து நிலையம் அமைவதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன்.
     
     கே.உமாசங்கர் (தேமுதிக): வளர்ந்து வரும் திருக்கோவிலூர் நகருக்கு புதிய விரிவுபடுத்தப்பட்ட பேருந்து நிலையம் அவசியம். இது நீண்டகால கோரிக்கையாகவும் உள்ளது.
     நான் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால், 5 ஏக்கர் பரப்பளவில் புதிய பேருந்து நிலையம் அமைக்க பாடுபடு
     வேன்.
     
     ஜி.ஆனந்தன் (மார்க்சிஸ்ட்): திருக்கோவிலூர் நகர பேருந்து நிலையம் நெருக்கடியில் செயல்படுவதுடன் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல்
     உள்ளது.
     நான் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால், மக்களின் கோரிக்கை நிறைவேற போராடியாவது புதிய பேருந்து நிலையம் அமைத்தே தருவேன்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai