Enable Javscript for better performance
40 தொகுதிகளும் எங்கள் கூட்டணிக்கே: விஜயகாந்த்- Dinamani

சுடச்சுட

    

    40 தொகுதிகளும் எங்கள் கூட்டணிக்கே: விஜயகாந்த்

    By  கள்ளக்குறிச்சி  |   Published on : 27th March 2014 08:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாற்பது தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கே வெற்றி கிடைக்கும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசினார்.
     ÷தேமுதிக வேட்பாளர் ஈஸ்வரனை ஆதரித்து கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் புதன்கிழமை அவர் பேசியது: கள்ளக்குறிச்சி தொகுதியில் நிறைவேற்ற வேண்டிய கோரிக்கைகள் ஏராளமாக உள்ளன. கோமுகி அணை நீண்டகாலமாக தூர்வாரப்படவில்லை. இதனால் நீர்ப்பிடிப்பு இல்லாமல் விவசாயம் பாதித்துள்ளது.
     ÷கல்வராயன்மலையை சுற்றுலாத் தலமாக்க வேண்டும், அங்கு கடுக்காய் தொழிற்சாலை அமைக்க வேண்டும், கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும், கள்ளக்குறிச்சியில் நீதிமன்ற பணிகள் விரைவாக முடிக்க வேண்டும், கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தை புறநகரில் அமைக்க வேண்டும் என இப் பகுதி மக்கள் கோரி வருகின்றனர். ஆனால் இப்பகுதியைச் சேர்ந்த அமைச்சர், இவற்றில் எதையும் இதுவரை நிறைவேற்றித் தரவில்லை.
     ÷நாட்டில் ஊழல் பெருகி வருகிறது. மத்தியில் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தால் மட்டுமே ஊழலை ஒழிக்க முடியும். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அதிகரித்துள்ளது. இதனால் நாற்பது தொகுதிகளிலும் இந்த கூட்டணிக்கே வெற்றி கிடைக்கும் என்றார்.
     தேமுதிக மாவட்டச் செயலர் எல்.வெங்கடேசன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai