செஞ்சி அருகே பனை மரத்தில் கட்டப்பட்டிருந்த கள் பானைகளை போலீஸார் சனிக்கிழமை உடைத்து அகற்றினர்.
செஞ்சி வட்டம், அவலூர்பேட்டை காவல் நிலையத்துக்கு உள்பட்ட தாயனூர் தோப்பு, கோவில்புரையூர் உள்ளிட்ட இடங்களில் பனை மரங்களில் கள் இறக்கி விற்பனை செய்து வந்தனர். தகவல் அறிந்த செஞ்சி டிஎஸ்பி தலைமையிலான போலீஸார் பனை மரத்தில் கட்டப்பட்டு இருந்த கள் பானைகளை உடைத்து அகற்றினர்.
இதில் தாயனூர் தோப்பு, கோவில்புரையூர், நொச்சலூர் தோப்பு, கோ.மோட்டூர், உள்ளிட்ட கிராமங்களில் பனை மரங்களில் பானை கட்டி கள் இறக்கி வந்தனர்.
இதனைத் தொடர்ந்து டி.எஸ்.பி., முரளிதரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் பழனி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீஸார் பானைகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
கள் இறக்குவது சட்டப்படி குற்றச் செயலாகும். இதனால் கள் இறக்கும் பனை மரங்களின் உரிமை யாளர்கள் மீதும், குத்தகைக்கு விடுபவர்கள் மீதும் வழக்கு தொடரப்படும் என டி.எஸ்.பி. முரளிதரன் எச்சரிக்கை விடுத்தார்.