Enable Javscript for better performance
அரசுப் பேருந்தில்  பிரசுரங்கள் ஒட்டிய 7 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    அரசுப் பேருந்தில்  பிரசுரங்கள் ஒட்டிய 7 பேர் கைது

    By கள்ளக்குறிச்சி  |   Published on : 17th April 2015 06:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரசுப் பேருந்தில் அச்சிட்ட துண்டுப் பிரசுரங்களை ஒட்டியதாக 7 பேர் மீது போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

    கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்தின் கண்ணாடியில் அச்சிட்ட துண்டுப் பிரசுரங்களை 7 பேர்கள் ஒட்டினார்களாம். இதை பேருந்தின் ஓட்டுநர் உதயகுமார், நடத்துநர் நல்லான் தட்டிக் கேட்டுள்ளனர். பிறகு அந்த நபர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

     இதுகுறித்து கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் புகார் செய்தனர். விசாரணையில் துண்டுப் பிரசுரம் ஒட்டியவர்கள் தியாகதுருகத்தைச் சேர்ந்த பாலு (எ) பாலசுப்பிரமணியன், வேலுமணி, ஆறுமுகம், ஜாகீர்உசேன், ரகு, பாலகிருஷ்ணன், ரவிச்சந்திரன் என தெரியவந்தது. அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார் 7 பேர்களை கைது செய்து, பிறகு விடுவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai