Enable Javscript for better performance
இன்று தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2 நாள்களில் அடுத்தடுத்து 8 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து தேமுதிக சார்பில்  அந்த மருத்துவமனை முன் வெள்ளிக்கிழமை (ஏப்.17) ஆர்ப்பாட்டம்  நடைபெறும் என்று திருக்கோயிலூர் எம்.எல்.ஏ-வும் தேமுதிக மாவட்டச் செயலருமான எல்.வெங்கடேசன் தெரிவித்தார்.

    விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தை பார்வையிட வந்த எல்.வெங்கடேசன் மருத்துவமனை முதல்வர் உஷாசதாசிவத்தை சந்தித்து அச்சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.

    பின்னர்  செய்தியாளர்களிடம்  அவர் கூறியதாவது:

    முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் கடந்த இரு நாள்களில் அடுத்தடுத்து 8 குழந்தைகள் உயிரிழந்தன. ஆனால் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் 4 குழந்தைகள் என்று தான் கூறப்படுகிறது. இங்கு போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லாதாலும், போதிய மருந்துகள் இல்லாத நிலையும் உள்ளது. இதுபோல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் இந்த நிலைதான் உள்ளது. சில நேரங்களில் நோயாளிகளிடம் வெளியில் இருந்து மருந்து, மாத்திரைகள் வாங்கி வர கூறுகின்றனர்.

    அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார மருத்துவமனைகளிலும் குழந்தைகள் நல மருத்துவர்களை நியமிக்க வேண்டும். மாவட்ட அரசு மருத்துவமனைகளில் அனைத்து வசதிகள் கொண்ட நவீன மருத்துவமனைகளாக மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார் எல்.வெங்கடேசன்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai