Enable Javscript for better performance
குழந்தைகள் இறந்த விவகாரம் மருத்துவமனையை முற்றுகையிட்ட பொதுமக்கள்- Dinamani

சுடச்சுட

    

    குழந்தைகள் இறந்த விவகாரம் மருத்துவமனையை முற்றுகையிட்ட பொதுமக்கள்

    By விழுப்புரம்  |   Published on : 17th April 2015 06:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  8 குழந்தைகள் இறந்த சம்பவத்தைத் தொடர்ந்து பொதுமக்கள் மருத்துவமனையை வியாழக்கிழமை முற்றுகையிட்டனர். அப்போது போலீஸார் அவர்களை கலைக்க முயன்றதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

     முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் மருத்துவச் சிகிச்சையின் போது கடந்த 2 நாள்களில் 8 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மருத்துவமனை முன் முற்றுகையிட்டனர்.

    இதையடுத்து அங்குவந்த மாவட்ட ஆட்சியர் வா.சம்பத், கோட்டாட்சியர் அனுசுயாதேவி ஆகியோர் முயற்சி பொதுமக்களை சமாதானப்படுத்த முயன்றனர். அப்போது  ஆட்சியருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுபட்டனர். அவர்களுக்கு விளக்கமளித்த ஆட்சியர் குழந்தைகளை இழந்த பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். அங்கு கூட்டம் அதிகமானதால் போலீஸார் அவர்களை கலைந்து செல்லும்படி எச்சரித்தனர். அவர்கள் கலைந்து போக மறுந்ததால், போலீஸார் அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது பொதுமக்களுக்கும், போலீஸாருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    அவர்களை போலீஸார் சமாளித்து அனுப்பிவைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai