Enable Javscript for better performance
குழந்தைகள் இறப்புக்கு மருத்துவ சேவை குறைபாடு காரணமில்லை- Dinamani

சுடச்சுட

    

    குழந்தைகள் இறப்புக்கு மருத்துவ சேவை குறைபாடு காரணமில்லை

    By விழுப்புரம்  |   Published on : 17th April 2015 06:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விழுப்புரம் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் இறப்புக்கு மருத்துவமனையில் அளித்த சிகிச்சை குறைபாடு காரணம் இல்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினார். 

    முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட  குழந்தைகள் அடுத்தடுத்து புதன்கிழமை உயிரிழந்தன.

    இதனைத் தொடர்ந்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் அரசு மருத்துவ மருத்துவமனையில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

    பின்னர் ஜெ.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியது:

    முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ மருத்துவமனையில் இரண்டு நாள்களில் சில பச்சிளம் குழந்தைகள் இறந்துள்ளன. இந்த இறப்பு அனைத்தும் குறைப் பிரசவம், குறைவான எடையுடன் பிறந்தது மற்றும் மூச்சுத் திணறல் போன்ற பல்வேறு காரணங்களால்தான் நிகழ்ந்துள்ளன. இதில் மருத்துவச் சிகிச்சை குறைபாடுகள் எதுவும் இல்லை.

    மருத்துவக் கல்வி இயக்குநர் கீதாலட்சுமி தலைமையில் எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையிலிருந்து பச்சிளம் குழந்தைகள் சிறப்பு மருத்துவர்கள் சீனுவாசன்,  குமுதா ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் விழுப்புரம் வந்து குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் பதிவர்தினியுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

    கர்ப்ப காலத்தில் எடை குறைவான தாய்மார்களை கண்டறிந்து அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் மற்றும் துணை இயக்குநர்களை அறிவுறுத்தியுள்ளோம். தற்போது குழந்தைகளுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இரு அவசரகால ஊர்திகள் இம் மருத்துவமனையில் நிறுத்தப்பட்டுள்ளன.

    விழுப்புரம் மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளின் உயர் சிகிச்சைக்காக விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்.

    இங்கு குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் தற்போது 78 குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றன. இவற்றில் எடை குறைவு போன்ற காரணங்களால் 12 குழந்தைகள் இன்குபேட்டரில் வைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளன. அந்த குழந்தைகளும் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பின் காரணமாக நன்றாக உள்ளன என்றார் ராதாகிருஷ்ணன்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai