Enable Javscript for better performance
குழந்தைகள் இறப்பைக் கண்டித்து ஏப். 20-ல் ஆர்ப்பாட்டம்: இந்திய கம்யூ.- Dinamani

சுடச்சுட

    

    குழந்தைகள் இறப்பைக் கண்டித்து ஏப். 20-ல் ஆர்ப்பாட்டம்: இந்திய கம்யூ.

    By விழுப்புரம்  |   Published on : 17th April 2015 06:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் இறந்த சம்பவத்தைக் கண்டித்து வரும் 20ஆம் தேதி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

     இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் ஏ.வி.சரவணன் மற்றும் அக் கட்சியினர்  பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களை மருத்துவமனையில் சந்தித்து வியாழக்கிழமை ஆறுதல் கூறினர்.

     இதனைத் தொடர்ந்து மாவட்டச் செயலர் ஏ.வி.சரவணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இது தொடர்பாக ஆட்சியர் வா.சம்பத் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு கேட்டறிந்தோம்.

    அவர்கள் அளித்த பதில்கள் எங்களுக்கு திருப்தியாக இல்லை. ஊட்டசத்து குறைபாட்டால் ஒரே நேரத்தில் குழந்தைகள் இறப்பது என்பது ஏற்கக் கூடிய பதில் இல்லை.

    இது மருத்துவர்களின் கவனக்குறைவால் நிகழ்ந்த இறப்பு. இதனைக் கண்டித்து வரும் 20ஆம் தேதி முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம். இதில் கட்சியின் மாநிலச் செயலர் முத்தரசன் பங்கேற்பார் என்றார்.

     இச் சந்திப்பின்போது மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் கலியபெருமாள், விக்கிரவாண்டி ஒன்றியச் செயலர் பாலசுப்பிரமணி உள்பட முகையூர் ஒன்றியச் செயலர்  முருகன் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai