Enable Javscript for better performance
சத்துணவு மையங்களில் அமைச்சர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சத்துணவு மையங்களில் சமூகநலத் துறை அமைச்சர் பா.வளர்மதி நேரில் பார்வையிட்டு வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

    ஏ.கே.குச்சிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, சுந்தரிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, வாணியம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கோலியனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்களில் இந்த ஆய்வு நடைபெற்றது.

    மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் முன்னிலையில் சமூகநலத் துறை அமைச்சர் பா.வளர்மதி இந்த ஆய்வை மேற்கொண்

    டார்.

    விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து சத்துணவு மையங்களிலும் மாணவ, மாணவிகளுக்கு சுகாதாரமான முறையில் மதிய உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் உத்தரவிட்டார்.

    இந்த ஆய்வின்போது வருவாய் கோட்டாட்சியர் அனுசுயாதேவி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) சாம்சன் தினகர்பாபு, மாவட்ட சமூகநல அலுவலர் எஸ்.கே.லலிதா, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் யசோதை, கோலியனூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜோதி, ராமமூர்த்தி உள்பட பலர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai