Enable Javscript for better performance
சிங்கவரம் தேர் வெள்ளோட்ட ஆலோசனைக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    செஞ்சி வட்டம், சிங்கவரத்தில் தேர் வெள்ளோட்டம் விடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் சிங்வரத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

    செஞ்சியை அடுத்த சிங்கவரம் மலை மீது குடவரை அரங்கநாதர்கோயில் அமைந்துள்ளது.

    இக்கோயில் தேர் சுமார் 90 ஆண்டுகளுக்கு முன்பு சேதமாகியது. இதன் பிறகு சிறிய தேர் திருவிழா நடைபெற்று வந்தது.

    இந்நிலையில் புதிய தேர் செய்ய முடிவெடுக்குப்பட்டு, இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ரூ 11.50 லட்சமும், கிராம நிதியாக ரூ 8 லட்சமும் மற்றும் பொதுமக்களிடமிருந்து நன்கொடையாக பெற்றவையும் சேர்ந்து ஆக மொத்தம் ரூ.60 லட்சம்  மதிப்பீட்டில் 41 அடி உயரத் தேர் செய்யப்பட்டது.

    இத்தேர் வெள்ளோட்டம் மே 22ஆம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இதற்கு முன்னதாக தெருக்கள், மின் கம்பங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து சாலைகளை விரிவாக்கவும், மின் கம்பங்களை இடம் மாற்றம் செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது.

    இக் கூட்டத்துக்கு இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் பிரகாஷ் தலைமை வகித்தார். ஊராட்சித் தலைவர் ரங்கநாதன் முன்னிலை வகித்தார்.

    பொதுப்பணித் துறை உதவி பொறியாளர் சம்பத்குமார், பி.டி.ஓ. ரோஷன், சிறப்புக் காவல்துறை உதவி ஆய்வாளர் முருகன், ஆர்.ஐ. குபேந்திரன், சுகாதார ஆய்வாளர் ஏழுமலை, இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளர் கோவிந்தாஜ், மேலாளர் மணி, திருப்பணிக்குழு நிர்வாகிகள் குணசேகரன், ஏழுமலை, இளங்கீர்த்தி, தீயணைப்பு நிலைய அலுவலர் சிதம்பரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai