Enable Javscript for better performance
லாரி மோதி மின்கம்பம் சேதம்: போக்குவரத்து பாதிப்பு- Dinamani

சுடச்சுட

    

    லாரி மோதி மின்கம்பம் சேதம்: போக்குவரத்து பாதிப்பு

    By உளுந்தூர்பேட்டை  |   Published on : 17th April 2015 06:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உளுந்தூர்பேட்டையிலிருந்து வியாழக்கிழமை கரும்பு ஏற்றிக் கொண்டு பிள்ளையார்குப்பம் வழியாக பெரியசெவலையை நோக்கிச் லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரி உளுந்தூர்பேட்டை திடக்கழிவு மேலாண்மை திட்ட அலுவலகம் எதிரே சென்ற போது எதிர்பாராத விதமாக சாலையோரம் இருந்த உயர் அழுத்த மின் கம்பத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் மின்கம்பிகள் உளுந்தூர்பேட்டை - திருவெண்ணெய்நல்லூர் சாலையில் அறுந்து விழுந்தன.

    இது குறித்து தகவலறிந்து சமபவ இடத்துக்கு வந்த மின்வாரிய அதிகாரி மற்றும் ஊழியர்கள் மின்கம்பத்தை மாற்றியமைத்து, மின் இணைப்பை சரி செய்தனர்.

    இதனால் இப் பகுதியில் சுமாôர் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai