Enable Javscript for better performance
வீட்டின் பூட்டை உடைத்து 43 பவுன் நகை, ரொக்கம் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    வீட்டின் பூட்டை உடைத்து 43 பவுன் நகை, ரொக்கம் திருட்டு

    By திருக்கோவிலூர்  |   Published on : 17th April 2015 06:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருக்கோவிலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 43 பவுன் நகை, மற்றும் ரொக்கப் பணத்தை  திருடிச்  சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

     திருக்கோவிலூர் பேரூராட்சிக்கு உள்பட்ட அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (48). டி.குன்னத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்தாளராக பணியாற்றி வருகிறார்.

     இவரது மனைவி மாலு (43). விளந்தை அரசு மேல்நிலைப் பள்ளியில் உதவித் தலைமை ஆசிரியை. வியாழக்கிழமை காலை வழக்கம்போல் இருவரும் வீட்டைப் பூட்டிவிட்டு பணிக்குச் சென்றுவிட்டனர்.

     நண்பகல் 12.45 மணிக்கு சிவக்குமார் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டின் உள்ளே பீரோவில் வைக்கப்பட்டிருந்த 43 பவுன் நகை மற்றும் ரூ.18 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

     இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் கீதா, ஆய்வாளர் மோகன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

     மேலும் விழுப்புரத்தில் இருந்து மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர் வரவழைக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து நகைகளைத் திருடி தப்பிய நபர்களைத் தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai