Enable Javscript for better performance
குடியரசு தின விழா கோலாகலம்- Dinamani

சுடச்சுட

    

    விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற 66ஆவது குடியரசு தின விழாவில், ஆட்சியர் வா.சம்பத் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அவர் 13 பயனாளிகளுக்கு ரூ.18.17 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

    ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள காவல்துறை அணிவகுப்பு மைதானத்தில் 66 ஆவது குடியரசு தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

    ஆட்சியர் வா.சம்பத் காலை 8 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இதனைத் தொடர்ந்து அவர் காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். தீயணைப்புத் துறை, வனத்துறை, ஊர்க்காவல் படை, சாரண, சாரணியர், தேசிய மாணவர் படை, ஜூனியர் ரெட்கிராஸ் ஆகியோரின் மரியாதையையும் ஏற்றுக் கொண்டார்.

    தொடர்ந்து, 41 காவலர்களுக்கு முதலமைச்சரின் காவல் பதக்கத்தை வழங்கினார். குடியரசு தின விழா கொண்டாடப்பட்டதற்கான நிகழ்வைக் குறிக்கும் வகையில் வெண்புறாக்களையும், கலர் பலூன்களையும் பறக்கவிட்டார்.

    தியாகிகளுக்கு கெளரவம்: 19 சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அவர்களின் இருப்பிடத்துக்கே சென்று பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதனைத் தொடர்ந்து முன்னாள் படைவீரர் நலத்துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, சமூக நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மாவட்ட தொழில் மையம், சமூக பாதுகாப்புத் திட்டம், வேளாண்மை துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, தாட்கோ ஆகிய துறைகளின் வாயிலாக 13 பயனாளிகளுக்கு ரூ.18.17 லட்சம் மதிப்பில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    6 பள்ளிகளில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அனைத்து பள்ளிகளுக்கும் ஆட்சியர் பரிசுகளை வழங்கினார்.

    அலுவலர்களுக்கு சான்றிதழ்: சிறப்பாக பணியாற்றிய பல்வேறு துறைகளைச் சேர்ந்த 95 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியர் வா.சம்பத் வழங்கினார்.

    நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ராஜேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பிருந்தாதேவி, விழுப்புரம் சரக காவல்துறை துணைத் தலைவர் எஸ்.முருகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.விக்கிரமன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் நிஷாசேகர், கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் பி.ராஜன், துணை காவல் கண்காணிப்பாளர் சீத்தாராமன், துணை ஆட்சியர் (பயிற்சி) பிரபு சங்கர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கோ.ராதா உள்பட பலர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai