Enable Javscript for better performance
திமுக செயல்வீரர்கள் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சார்பில் திருவெண்ணெய்நல்லூர் ஒன்றிய செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம், பாவந்தூர் மேட்டுக்குப்பத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    திருவெண்ணெய்நல்லூர் மேற்கு ஒன்றிய செயலாளர் பி.வி.ஆர்.விஸ்வநாதன் தலைமை வகித்தார். ஒன்றிய அவைத்தலைவர் கந்தசாமி, ஒன்றிய இளைஞரணி செயலாளர் நிர்மல்ராஜ், ஊராட்சிச் செயலாளர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய துணைச் செயலர்கள் காசிவிசுவாதன், சுதாசீனுவாசன், ஏழுமலை, ஒன்றிய பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அவைத்தலைவர் ராதாமணி வரவேற்றார்.

    கூட்டத்தில் விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செயலர் க.பொன்முடி பேசியதாவது: ஒவ்வொரு கிளையிலும் நூறு பேரைக் கொண்ட குழுவாகச் செயல்பட வேண்டும். அவர்கள் ஊருக்கு ஆயிரம் ஓட்டுகளை வாங்குவதற்கு பாட வேண்டும், சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருட காலம் இருப்பதால் ஒன்றிய அளவில் மூன்று மாதத்திற்கு ஒரு முறை கட்சிக் கூட்டங்களை நடத்தி கட்சியின் வளர்ச்சிக்கு பாடுபடவேண்டும். மக்களின் குறைகளை கண்டறிந்து அவற்றை களைவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai