Enable Javscript for better performance
பள்ளி ஆசிரியர்களுக்கு கருத்தாய்வு மையக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பள்ளி ஆசிரியர்களுக்கு கருத்தாய்வு மையக் கூட்டம்

    By திருக்கோவிலூர்  |   Published on : 27th January 2015 04:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருக்கோவிலூர் அருகே ரிஷிவந்தியம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6,7,8-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கான கருத்தாய்வு மையக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

    கூட்டத்துக்கு வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் டி.ஞானவேல் தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் ஜேம்ஸ் ரம்போலா, கே.ஏ.வெங்கடேசன், ஆ.பர்னபாஸ், சி.அந்தோணி, கே.விஜயா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் குமார பருவ குழந்தைகளின் மேலாண்மை உளவியல் என்ற தலைப்பில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. ஆசிரியர் பயிற்றுநர் டி.ஞானவேல், பட்டதாரி ஆசிரியர் மு.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். வட்டார கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் அ.தனபால் ஆங்கில உச்சரிப்பு பயிற்சி பற்றி ஆசிரியர்களுக்கு விளக்கினார்.

    ரிஷிவந்தியம், சித்தேரிப்பட்டு, கீழ்ப்பாடி, பிரிவிடையாம்பட்டு, வேளானந்தல், அவிரியூர், நூரோலை உள்ளிட்ட பள்ளிகளைச் சேர்ந்த 90 ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai