Enable Javscript for better performance
புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது- Dinamani

சுடச்சுட

    

    திண்டிவனத்தை அடுத்த தென்பசியார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவருக்கு புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது அண்மையில் வழங்கப்பட்டுள்ளது.

    ஊராட்சி ஒன்றிய பள்ளிகளுக்கான அறிவியல் கண்காட்சியில் மாணவர்களின் படைப்புகள் இடம்பெற புத்தாக்க அறிவியல் ஆய்வு மையம் சார்பில் மூன்று சிறந்த படைப்புகள் படைத்த மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தலா 5 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் படைப்புகள் அறிவியல் கண்காட்சியில் இடம் பெறுகின்றன. இதில் சிறந்த படைப்புகளுக்கு விருது வழங்கி, மாணவர்கள் கவுரவிக்கப்படுகின்றனர்.

    இதில் தென்பசியார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவர் அருள்தாஸ் இந்த கல்வி ஆண்டில் காந்த ஆற்றல் பயன்பாடு குறித்த படைப்புக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

    விருது பெற்ற மாணவர் அருள்தாசை பள்ளித் தலைமை ஆசிரியர் முருகன், ஊராட்சி மன்றத் தலைவர் கதிர்வேல், ஜாக்காம்பேட்டை கூட்டுறவு சங்க இயக்குநர் ராம்குமார் ஆகியோர் பாராட்டினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai