Enable Javscript for better performance
மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக் கூட்டம்

    By விழுப்புரம்  |   Published on : 27th January 2015 04:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விழுப்புரம் நகர மாணவர் திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    மாணவரணி அமைப்பாளர் வினோத் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசினார்.

    அவர் பேசியதாவது: தமிழ் தற்போது பாதுகாக்கப்பட வேண்டிய மொழியாக மாறி வருகிறது. தமிழ் மொழிக்காக குரல் கொடுக்கும் ஒரே தலைவர் கருணாநிதி மட்டுமே. ஆனால் தற்போது அரசியலுக்காக சிலர் வீரவணக்க நாள் கூட்டங்களை நடத்துகின்றனர். தியாகிகளுக்கு வீரவணக்க நாள் கூட்டம் நடத்துகிற தகுதி திமுகவுக்கு மட்டுமே உள்ளது என்றார். இக் கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றேனர்.

    செஞ்சி

    செஞ்சி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் செஞ்சியை அடுத்த அப்பம்பட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. செஞ்சி கிழக்கு ஒன்றியச் செயலர் விஜயகுமார் தலைமை வகித்தார். அவைத் தலைவர் சரவணன் வரவேற்றார். மேல்மலையனூர் கிழக்கு ஒன்றியச் செயலர் நெடுஞ்செழியன், பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ், செஞ்சி மேற்கு ஒன்றிய செயலாளர் விஜயராகவன், செஞ்சி நகரச் செயலர் காஜாநஜீர், மேல்மலையனூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். தலைமைக் கழக பேச்சாளர் சித்திரமுகிசத்தியவாணிமுத்து, விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலர் செஞ்சி மஸ்தான், சேலம் சுபாஷ் சிறப்புரையாற்றினர்.

    மாவட்ட மகளிரணித் தலைவர் ரத்னாகணபதி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கண்ணன் ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர் அய்யாதுரை நன்றி தெரிவித்தார்.

    திண்டிவனம்

    திண்டிவனம் அடுத்த கூட்டேரிப்பட்டில் மயிலம் ஒன்றிய திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    ஒன்றிய செயலர் ஏ.சேதுநாதன் தலைமை வகித்தார். வல்லம் ஒன்றியச் செயலர் அண்ணாதுரை வரவேற்றார். ஒன்றிய செயலர்கள் ஒலக்கூர் ராஜாராம்,மயிலம் மணிமாறன்,வல்லம் துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தலைமைக் கழகப் பேச்சாளர்கள் ஆவடி ஜான், சைதை தமிழ்மணி, விழுப்புரம் மாவட்ட செயலர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    மாவட்டப் பொருளர் ரவி, மருத்துவரணி சேகர், முன்னாள் ஒன்றிய அவைத் தலைவர் ராமதாஸ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai