Enable Javscript for better performance
அனந்தபுரம் அருகே தீ விபத்து:  5 வீடுகள், கரும்புத் தோட்டம் சேதம்- Dinamani

சுடச்சுட

    

    அனந்தபுரம் அருகே தீ விபத்து:  5 வீடுகள், கரும்புத் தோட்டம் சேதம்

    By  செஞ்சி,  |   Published on : 28th January 2015 11:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செஞ்சி வட்டம், அனந்தபுரம் அருகே 5 வீடுகள் மற்றும் கரும்புத் தோட்டம் செவ்வாய்க்கிழமை தீயில் எரிந்து சேதமானது.
     அனந்தபுரத்தை அடுத்த சிற்றசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சோமு. இவர் குடும்பத்துடன் செவ்வாய்க்கிழமை இரவு டிவி பார்த்துக் கொண்டிருந்தார்.
     அப்போது இவரது கூரை வீடு எதிர்பாராதவிதமாக தீ பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்.
     தீ வேகமாக அடுத்தடுத்த வீடுகளுக்கும் பரவியது. இதில் சோமு என்பரது வீட்டில் இருந்த சிலிண்டர் வெடித்து சிதறி பக்கத்தில் உள்ள முருகன் என்பவரது கரும்புத் தோட்டத்தில் விழுந்தது. இதனால் கரும்புத் தோட்டமும் தீ பிடித்து கருகின.
     தகவல் அறிந்து அனந்தபுரம் தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர். இதில் சோமு, சுப்பிரமணி, ராயர், கதிர்வேல், பலராமன் ஆகியோரது 5 வீடுகளும் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. கரும்புத் தோட்டமும் தீயில் முற்றிலும் கருகின.
     இது குறித்து அனந்தபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai