Enable Javscript for better performance
ஆற்றில் மணல் அள்ள  கிராம மக்கள் எதிர்ப்பு- Dinamani

சுடச்சுட

    

    ஆற்றில் மணல் அள்ள  கிராம மக்கள் எதிர்ப்பு

    By  விழுப்புரம்,  |   Published on : 28th January 2015 12:13 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தென்பெண்ணை ஆற்றில் அத்தியூர் திருவாதி பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதைக் கண்டித்து பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     விழுப்புரம் மாவட்டம், தென்பெண்ணை ஆற்றில் தொடர்ந்து மணல் கடத்தல் நடைபெற்று வருகிறது. மணல் அள்ளுவதற்கு ஒரு சில இடங்களில் அனுமதி பெற்று, ஆற்றின் பல்வேறு பகுதிகளிலும் மணல் கடத்தல் நடைபெறுவதாக புகார் கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
     இந்நிலையில், அத்தியூர்திருவாதி பகுதிகளில் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் மணல் அள்ளியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் திரண்டு மணல் அள்ளுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
     மேலும் அவர்கள் ஆற்றில் மணல் அள்ளப்படும் இடத்தை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்தினர்.
     இதனைத் தொடர்ந்து இப்பகுதியில் விழுப்புரம் தாலுகா போலீஸார் குவிக்கப்பட்டனர். பின்னர் போலீஸார் பொதுமக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
     விவசாயிகள் ஆவேசம்: இது குறித்து இப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ஆறுகளில் 3 அடி ஆழத்துக்கு மட்டுமே மணல் அள்ள வேண்டும். ஆனால் இவர்கள் பல மீட்டர் ஆழத்துக்கு மணல் அள்ளுகின்றனர். ஆற்றின் பெரும்பகுதியில் மணல் சுரண்டப்பட்டு தற்போது கட்டாந்தரையாக மாறியுள்ளது.
     இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு விவசாயம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. ஏற்கெனவே ஆற்றில் தண்ணீர் வருவதில்லை. தற்போது மணல் சுரண்டப்பட்டு நிலத்தடி நீரிலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றனர் என்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai