Enable Javscript for better performance
இந்திய கம்யூனிஸ்ட் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    உளுந்தூர்பேட்டை வட்டம் சேந்தமங்கலம் கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைக் கூட்டம் நிர்வாகி கே.தனபால் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
     வட்டாரச் செயலாளர் கே.ஆறுமுகம் பேசினார். இக் கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கிளைச் செயலராக கே.நாகப்பன், துணைச் செயலராக டி.காளிதாஸ், பொருளாளராக எம்.சுப்பிரமணியன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
     இக் கூட்டத்தில், மழையம்மன் கோயிலில் இருந்து சேந்தமங்கலம் மழையம்மன் களரி வரை உள்ள நடை பாதையை, தார் சாலையாக அமைக்க வேண்டும், மைலங்குப்பம், கிருஷ்ணாரெட்டிப் பாளையம் வரை உள்ள கோட்டைப் புறம்போக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றி, விவசாயிகள் விளை பொருட்களை எடுத்துச்செல்ல சாலை அமைத்துத் தர வேண்டும், சேந்தமங்கலம், வண்டிப்பாளையம் இடையே ஓடும் குதிப்போடை தண்ணீர் வீணாக ஆற்றில் கலக்கிறது. ஓடையை ஆழப்படுத்தி உப்பனை ஏரிக்கு தண்ணீரை திருப்பிவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai