Enable Javscript for better performance
கராத்தே போட்டி: அரசுப் பள்ளி மாணவர் சிறப்பிடம்- Dinamani

சுடச்சுட

    

    கராத்தே போட்டி: அரசுப் பள்ளி மாணவர் சிறப்பிடம்

    By  கள்ளக்குறிச்சி  |   Published on : 28th January 2015 11:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கராத்தே போட்டியில் மாநில அளவில் சிறப்பிடம் பிடித்த செல்லம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவரை ஒன்றியக் குழுத் தலைவர் பரிசு வழங்கி பாராட்டினார்.
     செல்லம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு கள்ளக்குறிச்சி ஒன்றியக் குழுத் தலைவர் அ.ராஜசேகர் தலைமை வகித்தார்.
     ஊராட்சி மன்றத் தலைவர் அரிகோவிந்தன் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் பி.அருள் ஜோதி வரவேற்றார்.
     போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு ஒன்றியக் குழுத் தலைவர் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
     மாநில அளவில் தூத்துக்குடியில் அண்மையில் நடைபெற்ற கராத்தே போட்டியில் 10ஆம் வகுப்பு பயிலும் பெ.பிரகாஷ்ராஜ் 3ஆம் இடம் பிடித்தார். இவரைப் பாராட்டி பரிசு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், ஜே.ஆர்.சி. ஒருங்கிணைப்பாளர் கோ.ஆறுமுகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai