Enable Javscript for better performance
கிரிக்கெட்:  ராகவன்பேட்டை அணி வெற்றி- Dinamani

சுடச்சுட

    

    யூத் மோடி கிளப் சார்பில் தூய்மை இந்தியா, பசுமை இந்தியா ஆகிய கருத்துகளை வலியுறுத்தி விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
     போட்டிகளில் 45 அணிகள் பங்கேற்றன. இதில் அரையிறுதிப் போட்டியில் ராகவன்பேட்டை, கோலியனூர், மாம்பழப்பட்டு, விவேகானந்தா கல்லூரி அணி தேர்வு செய்யப்பட்டன.
     ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் ராகவன்பேட்டை அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
     விழாவில் ஐபிஎல் கிரிக்கெட் வீரர் அபினவ், தாமிரபரணி கல்வி அறக்கட்டளை செயலர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், விஸ்வகர்ம கல்வி அறக்கட்டளை செயலர் சி.உமாபதி ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
     நிகழ்ச்சியில் பசுமை இந்தியா இயக்கத்தின் சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
     இதற்கான ஏற்பாடுகளை யூத் மோடிக் கிளப் தலைவர் கண்ணா, துணைத் தலைவர்கள் கி.உதயகுமார், சி.ஜெகதீஷ், துணை செயலர்கள் ஹரி, கிருஷ்ணா, அசோக் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai