Enable Javscript for better performance
கேட்பாரற்று கிடந்த 40 லிட்டர்  ரேஷன் மண்ணெண்ணெய்- Dinamani

சுடச்சுட

    

    கேட்பாரற்று கிடந்த 40 லிட்டர்  ரேஷன் மண்ணெண்ணெய்

    By  விழுப்புரம்,  |   Published on : 28th January 2015 11:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விழுப்புரத்தில் கேட்பாரற்றுக் கிடந்த 40 லிட்டர் ரேஷன் மண்ணெண்ணெய்யை குடிமைப் பொருள் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கைப்பற்றினர்.
     குடிமைப் பொருள் தனி வட்டாட்சியர் உமா மகேஸ்வரன் தலைமையில் வருவாய் ஆய்வாளர் தயாநிதி மற்றும் அதிகாரிகள் மாதாகோவில் தெரு அருகே சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த ஆட்டோ ஒன்றின் அருகே கேட்பாரற்று கேன் ஒன்று கிடந்தது. அதனை சோதித்தபோது, அதில் 40 லிட்டர் ரேஷன் மண்ணெண்ணெய் இருந்தது தெரிய வந்தது.
     மேலும் இந்த மண்ணெண்ணெய்க்கு யாரும் சொந்தம் கொண்டாடவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
     மண்ணெண்ணெய்யை பறிமுதல் செய்து மொத்த விற்பனையாளரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
     அந்த மண்ணெண்ணெய் யாருக்குச் சொந்தமானது, அதனை கடத்திச் சென்றது யார் என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai