Enable Javscript for better performance
சிறுவன் மாயம்- Dinamani

சுடச்சுட

    

    திண்டிவனம் அருகே விளையாட வீட்டை விட்டு வெளியே சென்ற சிறுவன் வீடு திரும்பாதது குறித்து வெள்ளிமேடுபேட்டை போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்கு பதிந்துள்ளனர்.
     நடுவந்தல் மாரியம்மன்கோவில் தெருவைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் வினோத் (14). இவர் கருவம்பாக்கம் பகுதியில் உள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.இந்நிலையில், திங்கள்கிழமை விளையாடப் போவதாக கூறிச் சென்ற வினோத் வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், வெள்ளிமேடுபேட்டை காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
     இது குறித்து போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai