Enable Javscript for better performance
சோ.குப்பத்தில் கிராம சபை கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    செஞ்சி ஒன்றியம், சோ.குப்பம் ஊராட்சியில் குடியரசு தின சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி தலைவர் கே.எஸ்.ராஜேந்திரன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெறறது.
     கூட்டத்துக்கு துணைத் தலைவர் வேலு முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் பாஸ்கரன் தீர்மானத்தை வாசித்தார்.
     தேர்தல் துணை வட்டாட்சியர் அனந்தசயணன், பற்றாளர் ராதா ஆகியோர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றனர். தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி, ஆசிரியர் ஜாப்பீர், வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
     ஊராட்சி பொது நிதி வரவு, செலவு, கணக்குகள் சமூக தணிக்கை செய்யப்பட்டது.
     வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை நடவடிக்கை எடுப்பது, ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஆட்டுப்பட்டி அமைப்பது என்பன உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai