Enable Javscript for better performance
தமிழ்ச் சங்க முப்பெரும் விழா- Dinamani

சுடச்சுட

    

    தியாகதுருகம் பாரதியார் தமிழ்ச் சங்கம் சார்பில் முப்பெரும் விழா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
     நிகழ்ச்சிக்கு பாரதியார் தமிழ்ச் சங்கப் பொருளாளர் தி.கி.சண்முகம் தலைமை வகித்தார். திருக்குறள் பேரவைத் தலைவர் பொன்.சுப்பிரமணியன், பவுனாம்பாள் மாரிமுத்து கல்வி அறக்கட்டளை நிறுவுநர் மா.முத்தமிழ் முத்தன், தமிழ்ச் சங்க காப்பளர் அ.மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாரதியார் தமிழ்ச் சங்கத் தலைவர் இரா.துரைமுருகன் வரவேற்றார்.
     இலக்கிய இன்பம் எனும் தலைப்பில் சின்னசேலம் முத்தமிழ் வளர்ச்சி சங்கத் தலைவர் பெ.அறிவழகன், சுவாமி விவேகானந்தர் வரலாற்றுச் சுவடுகள் எனும் தலைப்பில் கவிஞர் செ.வ.இராமானுஜம், புல்லறிவாண்மை திருக்குறள் அதிகார உரை கோ.ஞானபுத்தன், இன்றைய இந்திய குடியரசு எனும் தலைப்பில் கல்லை திருக்குறள் முன்னணி கழக நிறுவனர் கோ.பிரகாசு உள்ளிட்டோர் பேசினர்.
     ஏ.கே.டி. அகாதெமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 5ஆம் வகுப்பு மாணவி இர.ரோஷினி 1,330 திருக்குறளையும் ஒப்பித்ததற்காக தியாகதுருகம் வட்டார மருத்துவ அலுவலர் இரா.நடேசன் சொந்தச் செலவில் ரூ.1,330 மற்றும் திருக்குறட் செல்வி விருது வழங்கி பாராட்டினார்.
     திருக்குறள் சுப்பராயன் வள்ளுவரின் நெறிமுறைகள் குறித்து சொற்பொழிவுயாற்றி, மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கில் பாராட்டினர்.
     கவிச்சுடர் வா.ச.கணேசன், எஸ்.கே.மணி, ந.சிவப்பிரகாம் உள்ளிட்ட மூவர் விழாவில் பாராட்டப்பட்டனர்.
     விழாவில் புலவர் பாலபழனி, தமிழாசிரியர் எ.மா.சீனிவாசன், தமிழ்ச் சங்க சிறப்புத் தலைவர் சா.சுப்பிரமணியன், சொல்முரசு கி.ச.தமிழரசி, பாரதி சிவநேசன், அருள்நிதி இரா.குணசேரன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
     சங்க செயலர் கு.பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai