Enable Javscript for better performance
திருவள்ளுவர் விழா- Dinamani

சுடச்சுட

    

    சிறுவத்தூர் மாரியம்மன்கோயில் வளாகத்தில் திருவள்ளுவர் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
     விழாவிற்கு திருக்குறள் முன்னணிக் கழகப் பொருளாளர் எம்.பி.தனக்கண்ணு தலைமை வகித்தார். பழங்குடி மக்கள் சங்கத் தலைவர் இரா.கா.பா.காக்தி, எம்.கவிராஜன், மாவட்டக் கவுன்சிலர் கா.மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தியாகதுருகம் பாரதியார் தமிழ்ச் சங்கத் தலைவர் இரா.துரைமுருகன் வரவேற்றார்.
     கள்ளக்குறிச்சி திருக்குறள் முன்னணிக் கழகத் தலைவர் கே.வேல்முருகன் பேசினார். சிவன்ராஜ், பிரியங்கா குறள் நெறி பற்றி பேசினர். அய்யன் திருவள்ளுவர் இறைநெற் கோயில் தலைவர் சுப்பராயன் மாணவர்களுக்கு ரொக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
     சிறுவத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் த.பழனிவேல், இந்திலி ஊராட்சி மன்றத் தலைவர் பெ. ராஜேந்திரனுக்கு பொறியாளர் பா.நாகலிங்கம் பரிசு வழங்கி பாரட்டினார்.
     திருக்குறள் முன்னணிக் கழகச் செயலர் கோ.பிரகாசு, சமூகநல ஆர்வலர் இரா.வ.பார்த்தசாரதி, பழங்குடி மக்கள் நில ஆய்வு மைய எஸ்.கே.மணி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். குறள்நெறி பற்றி பேசிய மாணவர்கள் மற்றும் ஊராட்சி தலைவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai