Enable Javscript for better performance
மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

    By  விழுப்புரம்,  |   Published on : 28th January 2015 11:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விழுப்புரம் காங்கிரஸ் கமிட்டியின் எஸ்.சி. பிரிவு சார்பில் தேசிய ஊரக வேலைத் திட்டம் நிறுத்தப்பட்டதைக் கண்டித்து அக்கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
     இந்த ஆர்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி. பிரிவு மத்திய மாவட்டத் தலைவர் வி.டி.சி.சுரேஷ்ராம் தலைமை வகித்தார். தெற்கு மாவட்டத் தலைவர் என்.ராமமூர்த்தி வரவேற்றார். வடக்கு மாவட்டத் தலைவர் கே.ஜி.சுப்பையா தொடங்கி வைத்து பேசினார்.
     எஸ்.பி. பிரிவு மாநில ஆலோசகர் கே.விஜயன், வடக்கு மாவட்டத் தலைவர் எம்.டி.குலாம்மொய்தீன், மாநிலச் செயலர் டி.ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
     ஆர்ப்பாட்டத்தில் தேசிய ஊரக வேலை திட்டம், முதியோர் உதவித் தொகை உள்ளிட்டத் திட்டங்களை முறையாக செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
     இக் கோரிக்கைகளை வலியுறுத்தி புதுதில்லி சென்று நாடாளுமன்றத்தை முற்றுகையிடப் போவதாகவும் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai