Enable Javscript for better performance
மாவட்டத்தில் குடியரசு தின விழா- Dinamani

சுடச்சுட

    

    கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், சின்னசேலம் ஊராட்சி ஒன்றியங்களில் குடியரசு தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
     கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற விழாவில் ஒன்றியக் குழுத் தலைவர் அ.ராஜேசேகர் தேசியக் கொடி ஏற்றினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரு.கருணாநிதி, ப.பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர்.சி. பாலன் வரவேற்றார். அலுவலர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
     சின்னசேலம் ஊராட்சி ஒன்றயத்தில் ஒன்றியக் குழுத் தலைவர் ப.ராஜேந்திரன் கொடி ஏற்றினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ந.ராஜேந்திரன், ஆ.ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அலுவலர்கள், கவுன்சிலர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள் பலரும் பங்கேற்றனர்.
     தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றியக் குழுத் தலைவர் பச்சையம்மாள் வைத்திலிங்கம் கொடி ஏற்றினார். அலுவலர்கள், கவுன்சிலர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், அலுவலர்கள் பலரும் பங்கேற்றனர்.
     ஆர்.கே.சண்முகம் கலை அறிவியல் கல்லூரி நடைபெற்ற விழாவிற்கு கல்லூரியின் தலைவர் க.மகுடமுடி தலைமை வகித்தார். தாளாளர் கே.பி.ஆர்.பாலகிருஷ்ணன், துணைத் தலைவர்கள் ஜி.எஸ்.குமார், தே.மணிவண்ணன், பி.திருஞானசம்பந்தம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் முதல்வர் எம்.ஆர்.லட்சுமி நாராயணன் வரவேற்றார்.
     என்.எஸ்.எஸ்., என்.சி.சி. மாணவர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. கல்லூரிச் செயலர் என்.கோவிந்தராஜூ, பொருளாளர் தமிழ்மணி, ஆர்.கே.எஸ். கல்வி குழுமங்களின் முதல்வர்கள் வீ.கோவிந்தராஜூ, வ.மதிவாணன் மற்றும் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ,மாணவிகள் பங்கேற்றனர்.
     டி.எஸ்.எம். ஜெயின் பொறியியல் கல்லூரி நடைபெற்ற விழாற்கு டி.எஸ்.எம். கல்வி குழுமங்களின் நிறுவநர் கு.தேஜ்ராஜ் சுராணா தலைமை வகித்து கொடியினை ஏற்றி வைத்தார். கல்வி குழுமங்களின் தாளாளர் தே.
     மனோகர் குமார் சுராணா, தே.அசோக் குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்ததனர். கல்லூரியின் முதல்வர் ஸ்ரீமதி மதியழகன் வரவேற்றார். பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
     திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், அரகண்டநல்லூர் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் பேரூராட்சித் தலைவர் ஏ.ஆர்.வாசிம்ராஜா கொடியை ஏற்றி வைத்தார். துணைத் தலைவர் பி.ராஜ், உறுப்பினர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
     திருக்கோவிலூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கல்லூரி நிர்வாக இயக்குநர் ஆர்.செல்வராஜ் கொடியை ஏற்றி வைத்தார். பொருளாளர் வி.ஏழுமலை, தாளாளர் எம்.முகமதுஈசா, நிர்வாக அலுவலர் ஆர்.குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
     ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, பள்ளித் தலைமையாசிரியர் சி.ரகுராமன் தலைமை வகித்தார்.
     உதவி ஆசிரியர்கள் மா.ஆரோக்கியசாமி, ஜெரினா முன்னைõலை வகித்தனர். உதவி ஆசிரியை லட்சுமி வரவேற்றார். ஊராட்சித் தலைவர் மு.அமுதமொழி கொடி ஏற்றி வைத்தார்.
     ரிஷிவந்தியம் டேனிஷ் மிஷன் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பள்ளித் தலைமையாசிரியை ஹேனி ஸ்டெல்லா கொடி ஏற்றி வைத்தார். பின்னர் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
     மேலப்பழங்கூர் ஆர்.சி. நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, பள்ளித் தாளாளர் ஆர்.ஆரோக்கிய ரட்சகர் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் ஆ.பர்னபாஸ் வரவேற்றார். ஊராட்சித் தலைவர் எஸ்.முத்துராஜா கொடி ஏற்றி வைத்தார். பின்னர் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
     சேரன்தாங்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் கிராமக் கல்விக் குழுத் தலைவர் டி.கோவிந்தராஜ் கொடி ஏற்றி வைத்தார். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளித் தலைமையாசிரியர் பழனிச்சாமி, உதவி ஆசிரியர் மீனாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
     செஞ்சி: செஞ்சி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஆத்மலிங்கம் கொடியை ஏற்றினார். பள்ளித் தலைமை ஆசிரியர் மோகன் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழகப் பொருளாளர் மணிமாறன் முன்னிலை வகித்தார்.
     இதில் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
     அனந்தபுரம்: அனந்தபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் அனந்தபுரம் பேரூராட்சித் *தலைவர் ஆனந்தாயி கொடியேற்றினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வெற்றிபெற்ற மாணவர்களுக்கு ரோட்டரி சங்கம் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவிற்கு ரோட்டரி சங்கத் தலைவர் வா.கார்த்திகேயன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் அ.ஜேசுஜீலியஸ்ராஜா முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
     விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த காணை வி.இ.டி. கல்வியியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரியின் துணை தலைவர் தனபால் தலைமை வகித்து கொடியேற்றினார். முதல்வர் (பொறுப்பு) முருகன், பேராசிரியர்கள் பாலசுப்பிரமணியன், சுபலட்சுமி, தூயவன், பள்ளி முதல்வர் வசந்தா உள்பட பலர் பங்கேற்றனர்.
     வி.ஆர்.பி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளித் தலைமையாசிரியர் கந்தசாமி தலைமை வகித்தார். பள்ளித் தாளாளர் சோழன் கொடியை ஏற்றி வைத்து புறாக்களை பறக்க விட்டார். ஆசிரியர் வேல்முருகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விழாவில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai