Enable Javscript for better performance
முதியவர் கொலை வழக்கு:  நீதிமன்றத்தில் இளைஞர் சரண்- Dinamani

சுடச்சுட

    

    முதியவர் கொலை வழக்கு:  நீதிமன்றத்தில் இளைஞர் சரண்

    By  திருக்கோவிலூர்,  |   Published on : 28th January 2015 11:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையைச் சேர்ந்த முதியவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், போலீஸாரால் தேடப்பட்ட இளைஞர் திருக்கோவிலூர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தார்.
     வேலூர் மாவட்டம், ஆற்காடு பூபதி நகரைச் சேர்ந்தவர் ஞானசேகரன் (60). இவரது மகள் நவீனா (22). இவருக்கும் ராணிப்பேட்டை காரை பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (27) என்பவருக்கும் திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. திருமணம் முடிந்த 3 மாதங்களிலிருந்து இத் தம்பதியினர் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
     இதற்கிடையில், கணேசன் ஆற்காடு பகுதியைச் சேர்ந்த பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு, அவரை தனது வீட்டுக்கு அழைத்து வந்து குடும்பம் நடத்தி வந்தாராம்.
     இதனையறிந்த ஞானசேகரன், மனைவி அன்னம்மாள், மகள் நவீனா ஆகிய மூவரும் கடந்த 23ஆம் தேதி கணேசன் வீட்டுக்குச் சென்று இது குறித்து தட்டிக் கேட்டுள்ளனர். அப்போது ஞானசேகரனை கணேசன் கடுமையாக தாக்கினாராம். இதில் தலையில் பலத்த காயமடைந்த ஞானசேகரன், வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தார்.
     இது குறித்து ராணிப்பேட்டை காவல் நிலைய போலீஸார் இந்த வழக்கை கொலை வழக்காகப் பதிவு செய்து, தலைமறைவான கணேசனைத் தேடி வந்தனர்.
     இந்நிலையில், கணேசன் திருக்கோவிலூர் குற்றவியல் நீதித் துறை நடுவர் சண்முகராஜ் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை சரண் அடைந்தார்.
     கணேசனை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai