Enable Javscript for better performance
மூலசமுத்திரத்தில் கிராம சபைக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மூலசமுத்திரத்தில் கிராம சபைக் கூட்டம்

    By  உளுந்தூர்பேட்டை  |   Published on : 28th January 2015 12:04 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உளுந்தூர்பேட்டை வட்டம் மூலசமுத்திரம் கிராமத்தில் வருவாய் வட்டாட்சியர் எஸ்.உமாதேவி தலைமையில் கிராம சபைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
     கூட்டத்திற்கு தனி வட்டாட்சியர் (சமூக நலம்) ராஜூ, மண்டல துணை வட்டாட்சியர் காதர் அலி, வருவாய் ஆய்வாளர் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சித் தலைவர் செல்வக்குமார் வரவேற்றார்.
     இக் கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட திருத்தி அமைக்கப்பட்ட 7 வகையான உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகளின் பெயர்கள் வாசிக்கப்பட்டு, பொதுமக்கள் முன்னிலையில் அங்கீகரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் கிராம மக்கள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai