Enable Javscript for better performance
ரயில்வே மேம்பாலப் பணி தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    விழுப்புரத்தில் காட்பாடி ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
     விழுப்புரம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காட்பாடி ரயில்வே கேட் வழியாக ரயில்கள் கடக்கும் போது ரயில்வே கேட் மூடப்படும். பின்னர் கேட் மீண்டும் திறப்பதற்குள் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இருபுறமும் அணி வகுத்து நிற்கும். இதனால் போக்குவரத்து மிகுந்த பாதிப்படையும்.
     இதனைத் தவிர்க்க இங்கு மேம்பாலம் அமைக்கக் கோரி பொதுமக்கள், பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வந்தனர். இதனையடுத்து அரசு மேம்பாலம் அமைக்கும் பணியை தொடங்கியுள்ளது. இதன் முதல் கட்டமாக ரயில்வே கேட்டில் இருந்து திண்டிவனம் நோக்கிச் செல்லும் சாலையின் ஒரு பகுதியில் இதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. இப் பாலம் கட்டி முடிக்கப்பட்டால் விழுப்புரம் நகரின் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai