Enable Javscript for better performance
லாரி மீது கார் மோதி  4 பேர் காயம்- Dinamani

சுடச்சுட

    

    திண்டிவனம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நின்றிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் செவ்வாய்க்கிழமை காயமடைந்தனர். விருத்தாசலம் திரு.வி.க. நகரைச் சேர்ந்த அருள்தாஸ் (28) என்பவர் தனது காரில் உறவினர்களான பிரசாத் (28), புருஷோத்தமன் (60) மற்றும் ஜோதி (55) ஆகியோருடன் சென்னையில் இருந்து விருதாசலத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, செண்டூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது முன்னே நின்றிருந்த லாரி மீது கார் மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த நான்கு பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இவர்கள் அனைவருக்கும் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
     இது குறித்து மயிலம் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai