Enable Javscript for better performance
வாகனம் மோதி  புள்ளிமான் சாவு - Dinamani

சுடச்சுட

    

    திருக்கோவிலூர் அருகே சங்கராபுரம் செல்லும் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது.
     திருக்கோவிலூர்-சங்கராபுரம் பிரதான சாலையில் அத்தியூருக்கு சிறிது தூரத்தில் சாலையை கடக்க முயன்ற சுமார் 10 வயது புள்ளிமான் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் காயமடைந்த புள்ளிமான் அதே இடத்தில் உயிரிழந்தது.
     இரை தேட சாலையைக் கடக்க முயன்ற போது வாகனம் மோதி உயிரிழந்து இருக்கலாம் எனத் தெரிய வந்தது.
     தகவலறிந்த கடுவனூர் காப்புக்காடு வனத் துறை அதிகாரி மணி உள்ளிட்டோர் வந்து உயிரிழந்த புள்ளிமானை மீட்டனர்.
     அத்தியூர் கால்நடை மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்ட பிறகு இறந்த புள்ளிமானை வனப்பகுதியில் புதைத்தனர்.
     இது குறித்து பகண்டை கூட்டுச்சாலை காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai