Enable Javscript for better performance
ஆஞ்சநேயர் கோயில்களில் லட்சதீப விழா- Dinamani

சுடச்சுட

    

    ஆஞ்சநேயர் கோயில்களில் லட்சதீப விழா

    By விழுப்புரம்/செஞ்சி  |   Published on : 15th April 2016 07:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விழுப்புரம், விக்கிரவாண்டி, நல்லாண்பிள்ளைபெற்றாள் ஆகிய இடங்களில் உள்ள ஆஞ்சநேயர் கோயில்களில் லட்ச தீபத் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

     விழுப்புரம் ஆஞ்சநேயர் கோயில் 93-வது ஆண்டு லட்சதீப மகோற்சவ பெருவிழா கடந்த ஏப்.10ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து, தமிழ் புத்தாண்டு தினமான வியாழக்கிழமை லட்சதீப விழா நடைபெற்றது.

    காலை 6 மணிக்குத் தொடங்கி ஆஞ்சநேயருக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

     புத்தாண்டு தினத்தில் ஆஞ்சநேயரை வேண்டி,  காலை மற்றும் இரவு லட்சத்துக்கும் மேற்பட்ட நெய் தீபங்கள் ஏற்றி ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.

     தொடர்ந்து, ஏப்.19-ஆம் தேதி தெப்பல் உற்சவம் நடைபெறுகிறது.

     90 அடி ஆஞ்சநேயருக்கு பாலபிஷேகம்: விழுப்புரம் ஆஞ்சநேயர் குளக்கரையில் அமைந்துள்ள 90 அடி உயரமுள்ள ஸ்ரீ ஜெய ஜெய விஸ்வரூப அஞ்சநேயருக்கு, 10ஆம் ஆண்டு பாலபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

     ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.

    தமிழ் புத்தாண்டையொட்டி விழுப்புரம் கைலாசநாதர் கோயில், பெருமாள் கோயில், பாலமுருகன், வீரவாழி மாரியம்மன், விக்கிரவாண்டி வீர ஆஞ்சநேயர் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

    செஞ்சி : செஞ்சி வட்டம், நல்லாண்பிள்ளைபெற்றாள் பக்த ஆஞ்சநேயர் கோயில் 63-ம் ஆண்டு லட்ச தீப பெருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. 

     புதன்கிழமை மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கிய இவ்விழாவினை முன்னிட்டு வியாழக்கிழமை காலை மூலவர் பக்த ஆஞ்ச நேயருக்கு திருமஞ்சனத்துடன் சந்தனக் காப்பு அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 

     இதைத் தொடர்ந்து காலை 7 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத பெருமாள் சிறப்பு அலங்காரத்துடன் திருவீதி உலா நடைபெற்றது. மதியம் சமபந்தி போஜனம் நடைபெற்றது. 

     மாலை 6 மணிக்கு ராதாகிருஷ்ணன் அவர்களால் லட்ச தீபம் ஏற்றப்பட்டது.  தொடர்ந்து சென்னை காட்டாங்கொளத்தூர் சம்பந்தன் குழுவினர்களால் தெய்வத் தமிழ் இன்னிசை நிகழ்ச்சி மற்றும் பிரபந்த பஜனை நிகழ்த்தப்பட்டது. 

     விழாவில் சுற்று வட்டார கிராமத்தினர் மற்றும் ஊர்ப் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai