Enable Javscript for better performance
கணவர், மகன், மகளை கொலை செய்த வழக்கு: மனைவி, காதலனுக்கு 3 ஆயுள் தண்டனை- Dinamani

சுடச்சுட

    

    கணவர், மகன், மகளை கொலை செய்த வழக்கு: மனைவி, காதலனுக்கு 3 ஆயுள் தண்டனை

    By கள்ளக்குறிச்சி  |   Published on : 15th April 2016 07:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கள்ளக்குறிச்சி அருகே கணவர், மகன், மகளை கொலை செய்த வழக்கில் பெண், அவரது காதலனுக்கு 3 ஆயுள் சிறைத் தண்டனை விதித்து கள்ளக்குறிச்சி நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.

    சேலம் மாவட்டம், மணியனூர் காந்தி நகரைச் சேர்ந்தவர் முத்துசாமி மகன் கனகராஜ் (33). தறி பட்டறை கூலித் தொழிலாளி. இவரது மனைவி மகேஸ்வரி (30). இவருக்கு கிருத்திகா (6), சபரி (4) என்ற இரு பிள்ளைகள்.

    மகேஸ்வரியின் உறவினர் ராமு மகன் மகேந்திரன் (31). இவர் கள்ளக்குறிச்சியை அடுத்த உலகியநல்லூர் தெற்கு காட்டு கொட்டாய் பகுதியில் வசிக்கிறார்.

    வெளிநாட்டில் பணிபுரிந்த இவருக்கும் மகேஸ்வரிக்கும் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த தகாத உறவை கனகராஜ் கண்டித்துள்ளார்.

    அதனால் ஆத்திரமடைந்த மகேஸ்வரி, காதலுக்கு இடையூறாக இருந்த கணவர், குழந்தைகளை கொலை செய்ய திட்டமிட்டார்.

    இதற்காக, 30.12.13 அன்று, திருவண்ணாமலை கோயிலுக்கு செல்வதாகக் கூறி சேலத்திலிருந்து கணவர், குழந்தைகளை அழைத்துக் கொண்டு கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் இறங்கினார்.

    அங்கு, தயாராக இருந்த மகேந்திரனுடன் சேர்ந்து மறுநாள் அதிகாலை உலகியநல்லூர் காட்டு கொட்டாய் பகுதி அருகே ஒரு கிணற்றின் அருகே கனகராஜின் மகளை மகேந்திரன் பிடுங்கி அருகிலுள்ள கிணற்றில் தூக்கி வீச முயன்றார்.

    இதில் தடுக்க முயன்ற கனகராஜை மகேந்திரனும், மகேஸ்வரியும் சேர்ந்து தாக்கி கிணற்றில் வீசியுள்ளனர். பின்னர் மகள், மனனை கிணற்றில் தூக்கி வீசி கொன்று விட்டு, கிணற்றில் மூவரும் தவறி விழுந்து விட்டதாக நாடகமாடியுள்ளனர்.

    கீழ்குப்பம் போலீஸார் முதலில் சந்தேக மரணத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர்

    இருவரும் உலகியநல்லூர் கிராம நிர்வாக அலுவலரிடம் நடந்ததை கூறி ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர். இதையடுத்து இந்த வழக்கை சின்னசேலம் போலீஸார் கொலை வழக்காக பதிவு செய்தனர்.

    கள்ளக்குறிச்சி 3ஆவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ் வழக்கை விசாரித்த நீதிபதி ஜூலியட் புஷ்பா புதன்கிழமை தீர்ப்பு கூறினார்.

    அதில், குற்றம் சாட்டப்பட்ட மகேந்திரன், மகேஸ்வரிக்கு 3 ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்து விதித்தும் அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தும் உத்தரவிட்டார். இவ் வழக்கில் அரசுத்தரப்பில் வழக்குரைஞர் பாலாஜி ஆஜரானார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai