Enable Javscript for better performance
கண் பரிசோதனை முகாம்- Dinamani

சுடச்சுட

    

    திண்டிவனம் சர்வீஸ் அரிமா சங்கம், லயன்ஸ் சர்வீஸ் டிரஸ்ட் மற்றும் விழுப்புரம் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து பள்ளி மாணவர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாமை புதன்கிழமை நடத்தின.

    நகரில் உள்ள தாகூர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இம்முகாமை தாகூர் கல்விக்குழும நிறுவனத் தலைவர் ராஜாபாதர் துவக்கி வைத்தார். வட்டாரத் தலைவர் ஸ்மைல் ஆனந்த், செயலர் ஆனந்தகுமார் முன்னிலை வகித்தனர். அப்பள்ளியின் 400க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு விழுப்புரம் அகர்வால் கண் மருத்துவமனையின் மருத்துவக் குழுவினர் கண் பரிசோதனைகள் மேற்கொண்டனர்.முகாமில் அரிமா சங்க உறுப்பினர்கள் நூருல்லா, யுவராஜ், குமார், கண்ணன், பாரிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai