Enable Javscript for better performance
காவல் நிலையங்களில் இன்று முதல் கணினிமயமாகும் எப்ஐஆர் பதிவு- Dinamani

சுடச்சுட

    

    காவல் நிலையங்களில் இன்று முதல் கணினிமயமாகும் எப்ஐஆர் பதிவு

    By விழுப்புரம்  |   Published on : 15th April 2016 07:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் வெள்ளிக்கிழமை (ஏப்.15) முதல் கணினி மூலம் எஃப்ஐஆர் பதிவு செய்யும் முறை நடைமுறைக்கு வர உள்ளது.

    தமிழக காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் தொடர்பான புகார்களின்போது, அதற்கான எஃப்ஐஆர்.

    கையால் எழுத்தப்பட்டு, எழுத்துப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டு வந்தது.

    நீண்டகாலமாக பயன்பாட்டில் இருந்து வந்த இந்த நடைமுறை நவீன காலத்துக்கு ஏற்ற வகையில் மாற்றியமைக்கும் வகையில் கணினி (ஆன்லைன்) மூலம் எஃப்ஐஆர் புதிவு செய்யும் திட்டம் 2016 ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்த தமிழக காவல் துறை திட்டமிட்டது.

    இதற்காக, தமிழகம் முழுவதும் உள்ள 1,482 காவல் நிலையங்களில் உள்ள தலைமை எழுத்தர்கள், எழுத்தாளர் மற்றும் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர் உள்ளிட்ட போலீஸாருக்கு கடந்த சில மாதங்களாக பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

    விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 49 காவல் நிலையங்களிலும் போலீஸாருக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டதுடன், கணினிமயமாவதற்குத் தேவையான ஏற்படுகளும் செய்யப்பட்டு வந்தன.   இது குறித்து காவல் ஆய்வாளர் ஒருவர் கூறியதாவது:

    தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கையால் எழுத்தப்படும் எஃப்ஐஆர்களை சிசிடிஎன்எஸ் என்ற இணையதளத்தின் மூலம் கணினியில் (ஆன்லைனில்) பதிவு செய்யும் முறை கொண்டு வரப்பட்டது.

    ஆனால், கணினியில் இருந்து எஃப்ஐஆர் பதிவை பிரிண்ட் எடுத்து தரும் முறை அப்போது நடைமுறைப் படுத்தப்படவில்லை.  சதாரணமாக கணினியின் பிரிண்டரில் இருந்து, தாளில் எடுக்கப்படும் மையானது ஒருசில மாதங்களில் மறைந்துபோகும்.  அதனால், இந்த கையால் எழுதுவதற்கு பதில் கணினியில் எஃப்ஐஆர் பதிவு செய்து வழங்குவது சிக்கலாக இருந்து வந்தது.

    இந்த நிலையில், பல ஆண்டுகள் அப்படியே அழியாமல் இருக்கக்கூடிய வகையிலான மையினை  எஃப்ஐஆர் பிரிண்ட் எடுக்க பயன்படுத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, திருப்தி ஏற்பட்டதை தொடர்ந்து தற்போது இந்த முறை நடைமுறை படுத்தப்படுகிறது.  கணினி எப்ஐஆர் பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு காவல் நிலையத்திலும் 2 போலீஸாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai