Enable Javscript for better performance
தினமணி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு இயக்கம்: திருக்கோவிலூர், செய்யாறில் நடைபெற்றது- Dinamani

சுடச்சுட

    

    தினமணி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு இயக்கம்: திருக்கோவிலூர், செய்யாறில் நடைபெற்றது

    By திருக்கோவிலூர்  |   Published on : 15th April 2016 06:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகேயுள்ள மணலூர்பேட்டையில் தினமணி சார்பில் தேர்தல் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

    தினமணி நாளிதழ் சார்பில் மணலூர்பேட்டை ஆஞ்சநேயர் கோயில் பேருந்து நிறுத்தத்தில் மணலூர்பேட்டை தமிழ்ச் சங்கம், தமிழ்ப் படைப்பாளர்கள் சங்கம் இணைந்து வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை வியாழக்கிழமை நடத்தியது.

    நிகழ்ச்சிக்கு தமிழ்ச் சங்கம் மற்றும் தமிழ்ப் படைப்பாளர்கள் சங்கத் தலைவர் தமிழரிமா தா.சம்பத் தலைமை வகித்தார்.

    தனிப் பிரிவு காவல் துறை சிறப்பு உதவி ஆய்வாளர் பழனி, வருவாய் ஆய்வாளர் ராசுப்பிள்ளை, கிராம நிர்வாக அலுவலர் மு.இளங்கோ, வேளாண் உதவி அலுவலர்கள் தா.சிவநேசன், மா.வெங்கடகிருஷ்ணன், தென்பெண்ணை அரிமா சங்கத் தலைவர் பா.செந்தில்முருகன், எழுத்தாளர் தே.இளையராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அப்துல்கலாம் நற்பணி மன்றத் தலைவர் சா.மணிகண்டன் வரவேற்றார்.

    மணலூர்பேட்டை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சு.அகிலன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்தார்.

    இதைத் தொடர்ந்து காவல் துறையினர், தமிழ்ச் சங்கம் மற்றும் தமிழ்ப் படைப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், பொதுமக்கள், பேருந்து பயணிகள் உள்ளிட்ட பலர் கையெழுத்து இயக்கப் பலகையில் தங்களது கையெழுத்துகளை பதிவு செய்தனர்.

    இதேபோல, மணலூர்பேட்டை பேருந்து நிலையம், காந்தி சிலை பகுதியில் இந்த வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.

    மேலும், தேர்தல் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்து, வாக்காளர்களிடையே 100 சதவீத வாக்குப்பதிவுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் ஆயுள் காப்பீட்டுக் கழக முகவர் தா.குமார், அப்துல்கலாம் நற்பணி மன்றச் செயலர் கே.அமுல்ராஜ், பொருளாளர் மா.கண்ணன், அத்தியந்தல் ஊராட்சித் தலைவர் ரா.காண்டீபன், மேலந்தல் ஊராட்சித் தலைவர் எம்.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    செய்யாற்றில்...

    திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் தினமணி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

    தினமணி நாளிதழ் சார்பில் செய்யாறு பேருந்து நிலைய பகுதியில் தினமணி - இளைஞர் மணி, செய்யாறு கிளை இந்திய செஞ்சிலுவைச் சங்கம், செய்யாறு லயன்ஸ் சங்கம், செய்யாறு ரிவர்சிட்டி லயன்ஸ் சங்கம், செய்யாறு தொல்காப்பியர் சங்கம் ஆகியன இணைந்து வாக்காளர்களுக்கான கையெழுத்து இயக்கத்தை நடத்தின.

    நிகழ்ச்சிக்கு செய்யாறு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் த.பிரபுசங்கர் அ.ஞானசேகரன் தலைமை வகித்தார். மத்திய தேர்தல் விழிப்புணர்வு பார்வையாளர் நீத்தா பிரசாத் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, பதாகையில் முதலில் கையெழுத்திட்டு இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

    பின்னர், வட்டாட்சியர்கள் (செய்யாறு) ரெஹீனாபேகம், (வெம்பாக்கம்) நரேந்திரன், நகராட்சி ஆணையாளர் செல்வபாலாஜி, செய்யாறு லயன்ஸ் சங்கத் தலைவர்கள் விஜியகுமார், புகழேந்தி, செய்யாறு கிளை இந்தியன் செஞ்சிலுவைச் சங்க நிர்வாகிகள் மாதவன், அன்னை சண்முகம், கனகசபை, திருஞானம், அன்பரசி, வியாபாரிகள் சங்கம் கே.இராமலிங்கம், சங்க நிர்வாகிகள், பொதுமக்கள், பயணிகள் என பலர் கையெழுத்து இயக்க பதாகையில் தங்களது கையெழுத்துகளை பதிவு செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai