Enable Javscript for better performance
திருட்டு வழக்கில் கைதானவர் மருத்துவமனையில் இருந்து தப்பியோட்டம்- Dinamani

சுடச்சுட

    

    திருட்டு வழக்கில் கைதானவர் மருத்துவமனையில் இருந்து தப்பியோட்டம்

    By திண்டிவனம்  |   Published on : 15th April 2016 06:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் திருட்டு வழக்கில் கைதான நபர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அங்கிருந்து தப்பினார்.

    திண்டிவனம் பெருமாள் கோவில் தெருவில் புதன்கிழமை மொபெட்டில் வந்த பெண்ணிடம் கைப்பையை இளைஞர் ஒருவர் பறித்துக் கொண்டு தப்பிச் செல்ல முயன்றார். அப்போது, அங்கிருந்த பொதுமக்கள் அவரை மடக்கிப் பிடித்து தாக்கி திண்டிவனம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், ஆந்திர மாநிலம், புத்தூரை அடுத்துளஅள கீழப்பட்டு பகுதியைச் சேர்ந்த சிவா (19) என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து, போலீஸார் அவர் மீது வழக்குப் பதிந்தனர். இந்த நிலையில், பொதுமக்கள் தாக்கியதில் பலத்த காயமடைந்த சிவாவுக்கு சிகிச்சை அளிக்க திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு போலீஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வந்த அவர் புதன்கிழமை இரவு தப்பிச் சென்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai