Enable Javscript for better performance
மகாவீர் ஜெயந்தி: 19-ஆம் தேதி மதுக்கடைகளை மூட உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    மகாவீர் ஜெயந்தி: 19-ஆம் தேதி மதுக்கடைகளை மூட உத்தரவு

    By விழுப்புரம்  |   Published on : 15th April 2016 07:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மகாவீர் ஜெயந்தியையொட்டி வரும் செவ்வாய்க்கிழமை (ஏப்.19) மதுக்கடைகளை மூட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் எம்.லட்சுமி உத்தவிட்டுள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

     மகாவீர் ஜெயந்தி அன்று டாஸ்மாக் கடைகள், டாஸ்மாக் மதுபானக் கூடங்கள், தனியார் மதுபானக் கூடங்கள் ஆகியவை அனைத்தும் மூடப்பட வேண்டும் என்று நெறிமுறை வரையறுக்கப்பட்டுள்ளது.

    இதன்படி, வரும் ஏப்.19-ஆம் தேதி மாவட்ட முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், டாஸ்மாக் மதுபானக் கூடங்கள், தனியார் மதுபானக் கூடங்கள் அனைத்தையும் மூட வேண்டும். இதனால், மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகள், டாஸ்மாக் மற்றும் தனியார் மது கூடங்கள் வரும் செவ்வாய்க்கிழமை திறக்கப்படாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai