Enable Javscript for better performance
மாவட்டத்தில் மீன்பிடி தடைகாலம் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    விழுப்புரம் மாவட்டத்திலும் மீன்பிடி தடை காலம் தொடங்கியதால் 19 மீனவ கிராமத்தினர் மீன்பிடி பணிகளை நிறுத்தி படகு சீரமைப்பில் ஈடுபட உள்ளனர்.

    கடல் வளத்தைப் பாதுகாக்கவும், மீன்வளத்தைப் பெருக்கும் விதத்தில் நாடு முழுவதும் மீன் பிடி தடை காலத்தை அமல்படுத்தி மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த காலங்களில் மீனவர்களுக்கான உதவித் தொகையையும் அரசு வழங்கி வருகிறது.

     மீன் இனத்தை பாதுகாக்கும் வகையில், ஆண்டு தோறும் இனவிருத்தி காலமான ஏப்ரல் 15 முதல் மே இறுதி வரை, மீன் பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது.

    இந்தாண்டுக்கு மீன் பிடி தடைகாலம் ஏப்.15ல் தொடங்குகிறது. தொடர்ந்து மே 29-அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தக் காலங்களில் ஆழ்கடலில் மீன்பிடிக்கும் சுருக்குமடி வலை, இரட்டை மடி வலை போன்றவற்றை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த வலைகளினால், மீன் குஞ்சுகளும் பிடிக்கப்பட்டு மீன் வளம் வெகுவாக பாதிக்கும் என்பதால், இந்த தடை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    தடை காலம் தொடங்கியுள்ளதால், விழுப்புரம் மாவட்டத்தில், மரக்காணம் ஒட்டியுள்ள 19 கடலோர மீனவ கிராமங்களில், மீனவர்கள், தடை காலம் வரை ஆழ்கடலுக்குச் செல்லாமல் மீன்பிடி தொழிலை கைவிட்டு, படகுகளை சீரமைத்தல், புதிய வலைகளை தயாரித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai