Enable Javscript for better performance
\\\"வெளிப் பணி முறையில் ஊழியர் நியமனம் கூடாது\\\'- Dinamani

சுடச்சுட

    

    "வெளிப் பணி முறையில் ஊழியர் நியமனம் கூடாது'

    By விழுப்புரம்  |   Published on : 15th April 2016 07:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரசுத் துறைகளில் வெளிப் பணி முறையில் ஊழியர் நியமனத்தை தவிர்க்க வேண்டும் என்று அரசுப் பணியாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

     விழுப்புரத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.   மாநிலத் தலைவர் கே.சிவக்குமார் தலைமை வகித்தார். பொதுச்செயலர் குப்புசாமி, பொருளாளர் சத்தியராஜ், பிரசாரச் செயலர் பன்னீர்செல்வம், அமைப்புச் செயலர் சுகமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  அரசுப் பணியாளர் சம்மேளனத்தின் சிறப்புத் தலைவர் கு.பாலசுப்பிரமணியன் ஆலோசனை வழங்கிப் பேசினார்.

    அரசு ஊழியர்களுக்கான அகவிலைப் படி 6 சதவீதத்தை, மாநில அரசும் வழங்க வேண்டும். இது தேர்தல் விதிகளுக்கு எதிராக அமையாது.

    ஊரக வளர்ச்சித் துறையில் உள்ள ஊராட்சி செயலர்கள், துப்புரவுப் பணியாளர்கள், டேங்க் ஆபரேட்டர்களுக்கு, 2 மாதம் வழங்காமல் உள்ள ஊதியத்தை வழங்க வேண்டும்.

     அரசு ஊழியர்களுக்கான, நலத் திட்டங்களை கட்சியினர் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்க வேண்டும்.

     அரசு துறைகளில் வெளிப் பணி ஒப்படைப்பு அடிப்படையில் ஊழியர்களை நியமிப்பதை தடை செய்ய வேண்டும். அரசு ஊழியர்கள் அரசியல் குறுக்கீடு இல்லாமல் மக்கள் பணி செய்யும் அரசாணையை செயல்படுத்த வேண்டும். தேர்தல் பணியாளர்களுக்கு இரு மடங்கு ஊதியம் வழங்க வேண்டும். தொலைதூர இட மாறுதல்களை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai