Enable Javscript for better performance
நீதிமன்ற தலைமை எழுத்தருக்கு மிரட்டல்: ஒருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தலைமை எழுத்தரை மிரட்டியதாக ஒருவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
    கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக உலகங்காத்தான் கிராமத்தைச் சேர்ந்த பாட்டப்பன் மகன் சேட்டு (40) வந்துள்ளார். வழக்கு தொடர்பாக அவரிடம் விசாரிக்கப்பட்ட நிலையில், நீதிமன்ற நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஆபாசமாக அவர் பேசினாராம்.
    மேலும், நீதிமன்ற தலைமை எழுத்தர் சார்லஸ்வில்லியமை மிரட்டினராம். இது குறித்த புகாரின்பேரில், கள்ளக்குறிச்சி போலீஸார் வழக்குப்பதிவு செய்து சேட்டை கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai