Enable Javscript for better performance
அரசியில் கட்சிகள், வேட்பாளர்கள் நாளிதழ்களில் விளம்பரம் செய்ய முன் அனுமதி பெற்ற வேண்டும்- Dinamani

சுடச்சுட

    

    அரசியில் கட்சிகள், வேட்பாளர்கள் நாளிதழ்களில் விளம்பரம் செய்ய முன் அனுமதி பெற்ற வேண்டும்

    By dn  |   Published on : 15th May 2016 06:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாளிதழ்களில் ஞாயிறும மற்றும் திங்கள்கிழமை விளம்பரம் செய்ய வேட்பாளர்கள், அரசியில் கட்சியினர் முன் அனுமதி பெற வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் எம்.லட்சுமி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலரும்மான எம்.லட்சுமி வெளியிட்ட செய்திக் குறி்ப்பு:

    2016 சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள வழிகட்டுதலின்படி, விழுப்புரம் மாவட்டத்தில் ஞாயிறு(மே 15), திங்கள்(மே 16) ஆகிய இரு தினங்களில் எந்த ஒரு அரசியில் கட்சியோ, வேட்பாளரோ, அவர்கள் சார்ந்தவர்களோ மாநில, மாவட்ட அளவில் அமைக்கப்படுள்ள ஊடக சான்றிதழ் மற்றும் ஊடக கண்காணிப்பு குழுவின் முன்அனுமதி பெற்ற பின்னரே விரம்பரங்கள் வெளியிட வேண்டும். அந்த விளம்பரத்தில் அனுமதி பெறப்பட்ட எண் குறிப்பிடப்பட வேண்டும்.

     விழுப்புரம் மாவட்டத்துக்கு ஊடக சான்றிதழ் மற்றும் ஊடக கண்காணிப்பு குழு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படுகிறது.

     ஆகவே, ஊடக சான்றிதழ் மற்றும் ஊடக கண்காணிப்பு குழுவின் அனுதி பெறமால் விளம்பரம் வழங்கினால் நவடிக்கை எடுக்கப்படும். இதனை, வேட்பாளர்கள், அரசியல் கட்சியனர் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai