Enable Javscript for better performance
தேர்தல் பாதுகாப்பு பணியில் 4 ஆயிரம் போலீஸார்- Dinamani

சுடச்சுட

    

    விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் பாதுபாப்புப் பணியில் போலீஸார், முன்னாள் படைவீரர்கள், ஊர்காவல் படையினர் உள்பட 4 ஆயிரம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுப்பட உள்ளனர்.

    11 சட்டப்பேரவை தொகுதிகளைக் கொண்ட விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 3,223 வாக்குச்சாவடிகள் உள்ளன. இங்கு திங்கள்கிழமை நடைபெற உள்ள வாக்குப் பதிவையொட்டி முன்னாள் படை வீரர்கள் 500 பேர், ஊர்காவல் படையினர் 400 பேர், தீயணைப்பு துறையினர், வனத் துறையினர் மற்றும் போலீஸார் உள்பட 4 ஆயிரம் பேர் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.

    வாக்குச்சாவடி பாதுகாப்பு, வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு வந்து, எடுத்து செல்லுதல் போன்ற பணிகளை மேற்கொள்ள உள்ளனர். இதற்காக, 228 மொபைல் குழுலும் அமைக்கப்பட்டுள்ளன.

    தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவோருக்கு வாக்குப் பதிவு மையம் ஒதுக்கீடு செய்யும் பணிகள் விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவலர் மைதானத்தில் சனிக்கிழமை காலை தொடங்கி இரவு வரை நடைபெற்றது. இதனை, காவல் ஆய்வாளர் ரேவதி தலைமையிலான தேர்தல் பொறுப்பு போலீஸார் மேற்கொண்டனர்.

    இதையடுத்து, ஒதுக்கீட்டு செய்யப்பட்ட வாக்குச்சாவடி பகுதிகளுக்கு அவர்கள் வேன் மூலம் பறப்பட்டுச் சென்றனர். இதனை, ஏஎஸ்பி ஸ்ரீ அபினவ், தனிப் பிரிவு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டர் ஆய்வு செய்தனர்.

    இதேபோன்று, மாவட்டத்தில் உள்ள 222 பாதற்றமான வாக்குச்சாவடிச் சாவடிகளில் துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணயில் ஈடுப்படு உள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai